Friday, January 22, 2010

அருணாச்சல பிரதேசம் Vs காங்கிரஸ்


இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்துக்கு சீனா பல வருடங்களாக உரிமை கொண்டாடி வருகிறது.

அருணாசல பிரதேசத்தில் 2 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு (
வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் & மண் அரிப்பைத் தடுக்கும் திட்டத்திற்கு ) ஆசிய வளர்ச்சி வங்கி அளிக்க இருந்த கடன் உதவியை சீனா தலையிட்டு தடுத்து நிறுத்தி உள்ளது.

கடந்த மாதம் , பிரதமர் மன்மோகன்சிங் அங்கு சென்றிருந்தபோது அருணாசல பிரதேசம் சூரியன் உதிக்கும் நமது நிலப்பரப்பு என்று பேசினார். அவரது இந்த பேச்சுக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சீனவின் தூதர் சுன் யூக்சி, அருணாசல பிரதேசம் முழுவதும் சீனாவுக்கு சொந்தமான பகுதி என்று கூறியிருந்தார். அருணாசல பிரதேசம் முழுவதையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என அவர் கூறியிருந்தார்.

see india map in GoogleMap. கூகிள் டிரிபிள் கேம் விளையாடுகிறது.

http://ditu.google.cn/ - சீனாவின் ஒரு பகுதி அருணாசல் பிரதேசம்

http://maps.google.co.in/ - இந்தியாவின் ஒரு பகுதி அருணாசல பிரதேசம்.

http://maps.google.com/ - சர்ச்சைக்கு உட்பட்ட இடம் அருணாசல பிரதேசம்
(காஷ்மீர் போல இதையும் புள்ளிக்கோடுகளால் காட்டி உள்ளனர்.

புத்த மதத்தலைவர் தலாய்லாமா அருணாசல பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்ய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து சின பத்திரிக்கை ஒன்று வெளியிட்ட கட்டுரையில் 'அருணாசல பிரதேசத்தில் தலாய்லாமாவிற்கு சுற்றுப்பயணம் செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது சீனாவை அதிருப்தி அடையச்செய்துள்ளது. போருக்கு அழைக்கும் நோக்கத்தோடு இந்தியா இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறதோ என்று சீனா சந்தேகமடைகிறது. 1962ஆம்ஆண்டு சீனாவுடன் இந்தியா போரிட்டு தோல்வியடைந்ததை பாடமாக இந்திய எடுத்துக்கொள்ள வேண்டும்."என்று கட்டுரை வெளியிட்டிருந்தது.

''அருணாசல பிரதேசத்தில் இருநாடுகளுக்கும் இடையில் பிரசனை நீடிக்கும் போது தலாய்லாமாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய அனுமதி அளித்தது கண்டிக்கத்தக்கது"என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜின் காங் தெரிவித்திருந்தார்.


இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஆங்கிலேயர் வரையறை செய்த `இந்தியா-சீனா எல்லை'யை சீனா ஏற்க மறுத்து வருகிறது.

இந்தியாவின் எல்லையோர பகுதிகளை சீனா ஆக்கிரமித்ததை தொடர்ந்து, கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே போர் நடந்தது. அதன் பிறகு, எல்லை பிரச்சினை குறித்து இரு நாடுகளுக்கும் இடையே 13 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எனினும், எல்லை பிரச்சினைக்கு இதுவரை சுமூக தீர்வு காணப்படவில்லை.

அதே நேரத்தில், காஷ்மீர் மாநிலத்தில் 43 ஆயிரத்து 180 சதுர கி.மீ. பகுதியை சீனா ஆக்கிரமித்து விட்டது. இது குறித்து இந்தியா பிரச்சினை எழுப்பினால், "இந்தியாதான் சீனாவுக்கு சொந்தமான 90 ஆயிரம் சதுர கி.மீ. பகுதியை ஆக்கிரமித்து விட்டது'' என சீனா அடாவடியாக பதில் கூறி வருகிறது.
சீனா உரிமை கோரும் பெரும்பாலான பகுதிகள், அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ளன. இது தவிர, சிக்கிம் உள்ளிட்ட சில எல்லையோர மாநிலங்களிலும் சீனா மூக்கை நுழைத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த 3-ந் தேதி அன்று பிரதமர் மன்மோகன்சிங் அருணாசல பிரதேசத்துக்கு சென்றார். அதற்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மன்மோகன்சிங் பெயரை குறிப்பிடாமல், இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மாஜாவுக்சு அறிக்கை வெளியிட்டார். வெளியுறவு இணைய தளத்தில் அந்த அறிக்கை நேற்று வெளியானது.

அதில், "இந்திய - சீன எல்லை, இன்னமும் அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்படவில்லை. எனவே, சீனாவின் தீவிரமான கவலையை பொருட்படுத்தாமல் பிரச்சினைக்குரிய பகுதிக்கு (அருணாசல பிரதேசம்) இந்திய தலைவர் (மன்மோகன்சிங்) பயணம் மேற்கொண்டதால் சீனா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இந்தியா - சீனா உறவில் மேம்பாடு ஏற்பட வேண்டுமானால் சீனாவின் கவலையை இந்தியா உணர்ந்து கொள்ள வேண்டும் என்று சீனா கேட்டுக்கொள்கிறது'' என கூறப்பட்டுள்ளது.

அருணாசல பிரதேசத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது வெட்க கேடானது.

அண்மையில் நடந்த அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலில் 70 சதவீத மக்கள் வாக்களித்து இருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், அருணாசல பிரதேசத்தை சீனா எப்படி சொந்தம் கொண்டாட முடியும்?''

ஆளும் காங்கிரஸ் கடந்த 60 வருட ஆட்சியில், வெளியுறவு கொள்கையில் உறுதியாக இல்லாமல் , மற்ற நாட்டினரின் இழுப்புக்கு எல்லாம் ஆடியுள்ளது என்பது இதில் இருந்து தெளிவாகிறது ?????