Tuesday, July 28, 2009

மகேஷ் . S

( தோற்றம் 22Jun1978 - மறைவு 8Aug2004 )

என் முதல் பதிப்பு, மறைந்த என் இரண்டாம் அண்ணன் "மகேஷ்" பற்றியதாக இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .

வரும் "8 Aug 2009" அன்று எங்கள் சகோதரன் மறைந்து 5 ஆண்டுகள் நிறைவு அடைகிறது . கடந்த 5 ஆண்டுகளை நினைத்து பார்க்கும் பொழுது, அவனின் பிரிவை ஏற்றுகொள்ளவே முடியாத துக்கம் மனதை அழுத்துகிறது.

அன்று, அந்த துக்கத்தை ஜீரணிக்க முடியாமல் மனம் வெந்து கொண்டு இருக்கும் பொழுதே , மற்றவர்கள் மூலமாக பல கஷ்டங்கள், அவமானம், கிண்டல் , கேலி வந்ததையும் சகித்துக்கொண்டு மேலே வந்துள்ளோம் என்று நினைக்கும் பொழுது, இது முழுவதுமாக மகேஷின் ஆசீர்வாதமாகத்தான் எங்களுக்கு தோன்றுகிறது .

இந்த 5 வருடங்களில் நான் கற்று கொண்ட படிப்பினை அதிகம் என்றால் மிகையாகாது. வேலை , வருமானம் , படிப்பு போன்றவற்றில் எனக்கு ஏற்பட்ட முன்னேற்றம், இந்த சமூகத்தில் வீடு, குடும்ப நிலை, திருமணம் ஆகியவற்றிலும் என்னை சில படிகள் முன்னுக்கு செல்ல உதவியது. ஒன்று மட்டும் நிஜம் - எதுவும் யாருக்கும் சும்மா கிடைப்பதில்லை. முயற்சி உடையர் இகழ்ச்சி அடையார் என்பது தனிப்பட்ட முறையில் மிக சரி என்பதே என் கூற்று . இப்படி சொல்லுவதால் தோல்வியே இல்லை என்பது அர்த்தம் இல்லை . மீண்டும் மீண்டும் முயன்றால் வெற்றி நிச்சயம் என்பதே உண்மை .

இந்த வெற்றி முழுவதுமாக மகேஷின் ஆசிர்வாதம் மட்டுமே . அன்று, நான் துவண்டு விடாமல் என்னை மன ரீதியாக வலுப்படுத்தி , பக்குவ படுத்தி , எங்கள் குடும்பம், இந்த சமுகத்தில் உயர் நிலைக்கு முன்னேற்றி செல்ல விடாமுயற்சியுடன் என்னை இயங்க வைத்தவன் அவனே .

இங்கு நான் சொல்ல விரும்பும் விஷயமும் இதுவேதான் . நாம் எப்படி பட்ட கஷ்ட நிலையில் இருந்தாலும் , சுய நலமில்லாமல் , முழு நம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன் செயல் பட்டால் வெற்றி எட்டும் தூரம்தான் !!!!!!!!.





மீண்டும் சந்திப்போம்

நன்றி வணக்கம்

--இப்படிக்கு JP


Free Web Counter

Free Counter

5 comments:

Unknown said...

Happy to be the first person to comment u on ur first blog...your first blog is very touching and motivating us all too...keep continuing...!!! :)

Unknown said...

anna.........im nivi its very nice

Anonymous said...

Hello JP,

Stumbled upon this page from facebook. Good to see that your blogging in tamil :-).

Wish you many more success in your life.

God bless.

Karthikeyan

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

வணக்கம் ஜே.பி !
உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு இந்த அளவு ஒரு ஊக்கமாக இருந்துள்ள உங்களின் அன்பு சகோதரர் மகேஷின் நினைவுகளை இன்னும் கொஞ்ச விவரமாக தெரிந்துக்கொள்ள ஆவலாக உள்ளது! மறதி நிறைந்த மனித வாழ்க்கையில், உலக வாழ்க்கையை விட்டு மறைந்துப் போன ஒரு சகோதரனின் நினைவுகளை இன்னும் மறவாமல், மனதில் சுமந்து வருவதுக் கண்டு மனம் நெகிழ்கிறது! வாழ்த்துக்கள்!

Vidya said...

Death of aloved one is a shattering experience leaving us with lifetime scars....i still remember feeling hysterical thinking he cant possibly be dead...how can he leave us and waiting for him to get up and say "hey am alrite"....had wild dreams about he coming back....expecting some magic....It created a period of painful questioning....Where am i going in my life? Whats the purpose of life? What i really value in life? Does this life really matter?...Just as u say Prakash....he will be forever with us........in our thoughts.......

Post a Comment

உங்கள் விமர்சனம் எனக்கு மேலும் எழுத உற்சாக மூட்டும்...