Friday, October 8, 2010

சிந்தனைகள்

படித்ததில் பிடித்தவை ==>>

* ‘நாம் இப்போது எப்படி இருக்கிறோம் என்பது, இதற்கு முன் நாம் என்ன சிந்தித்தோம் என்பதைப் பொறுத்தது’ என்கிறார் புத்தர்.
* நாம் எதைச் சிந்திக்கிறோம் என்பதோடு, நாம் எதை ஆழமாக நம்பிச் சிந்திக்கிறோமோ அது நம்முடைய வளர்ச்சியில் அதிகமாகப் பிரதிபலிக்கிறது.
* மனம் எதை ஆழமாக நம்புகிறதோ அதைத்தான் மனிதன் சாதிக்கிறான்.
* தொழிலில் வெற்றியும், தோல்வியும் மனதின் திறமையால் நிர்ணயிக்கப்படுவதில்லை. மனப்பான்மையினால் தான் நிர்ணயிக்கப்படுகிறது.
* வெற்றியைச் சிந்தியுங்கள். வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள். வெற்றியை உருவாக்குவதற்குத் தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும்.

* ஒரு மனிதனுடைய மகிழ்ச்சியும், துயரமும் அவன் எந்த அளவுக்குக் கோபத்தைக் கட்டுப்படுத்துகிறவனாக இருக்கிறான் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
* ஒருவனுடைய சூழ்நிலை எவ்வளவு அதிர்ஷ்டவசமானதாக இருப்பினும் கோபத்தை அவன் அடக்காவிட்டால் முழுமையான துயரத்திற்கு ஆளானவனாகவே அவன் இருப்பான்.
* ஒருவனுடைய அறிவின் முதிர்ச்சியை எந்த அளவுக்கு கோபம் தணிந்தவனாக இருக்கிறான் என்பதை வைத்துக் கணிக்கலாம்.
* கோபம் கொள்ளுதல் குழந்தைப் பருவத்தில் ஏற்படுகின்ற பிரதிக்கிரியைய் என்றும் அது வாலிபப் பருவத்திலும் அதற்குப் பின்னும் தொடர்கிறது.
* தொல்லைகள் நிரம்பிய இந்த உலகத்தில் அமைதியும் சமாதானமும் காண துணிச்சலும் நம்பிக்கையும்தான் தேவை.
* ஒரு விஷயம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் நீங்கள் செய்கின்ற முயற்சியின் உத்வேகமும் இருக்கும்.

* அடுத்தவர்களைப் பற்றி நாம் சிந்தித்து அவர்களுக்காக ஏதாவது செய்யாவிட்டால், சந்தோஷத்திற்கான சிறந்த வழியை இழந்துவிடுகிறோம்.
* பெறுவதிலோ, வைத்திருப்பதிலோ சந்தோஷம் இல்லை. தருவதில்தான் சந்தோஷம் இருக்கிறது.
* சந்தோஷம் என்பது நறுமணத் திரவியத்தைப் போல. உங்கள் மீது சில துளியாவது படாமல் உங்களால் அடுத்தவர் மேல் அதைத் தெளிக்க முடியாது.
* ஒரு மனிதனிடம் என்ன இருக்கிறது என்பதைவிட அவன் என்னவாக இருக்கிறான் என்பதே அவனுக்கு சந்தோஷத்தைத் தருகிறது.
* ஒரு மனிதன் தனியாக இருக்கும்போது அவனிடம் என்ன இருக்கிறது, எதை யாராலும் அவனுக்குத் தர முடியாது அல்லது அவனிடமிருந்து எடுத்து செல்ல முடியாது என்பது நிச்சயம் அவனிடம் இருக்கும் செல்வங்களைவிட, உலகின் கண்களுக்கு அவன் எப்படித் தென்படுகிறான் என்பதைவிட அவசியமானதாகும்.
* சுவையான கருத்துக்களை சிந்திப்பவனே மிகவும் சந்தோஷமான மனிதன்.
* உள்ளிருக்கும் எண்ணங்கள், உணர்வுகளிலிருந்து வரும் சந்தோஷம்தான் உங்களுடனேயே நிலைத்து நிற்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம் எனக்கு மேலும் எழுத உற்சாக மூட்டும்...