Wednesday, September 1, 2010

குடி பழக்கமும், அரசியல் சுயநலமும்

சமூக அளவில் இன்று மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் விஷயம் இதுவேதான். ஆனால், ஆளுகின்ற அரசாங்கமோ இதை ஒரு நல்ல வருமானம் ஈட்டும் தொழிலாகவே பார்க்கின்றது.

நல்ல அரசாங்கம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ள இவர்கள் கையில் எடுக்கும் இலவச திட்டங்களை விட இன்று முக்கியமான தேவை மதுவிலக்கு மட்டுமே.

ஒரு தின கூலி பெறும் தொழிலாளியில் இருந்து ஒரு நிர்வாகத்தை நடத்தும் மேலாண்மை இயக்குனர்கள் வரை அனைவரும் பாரபட்சம் இல்லாமல் பின்பற்றும் ஒரு பழக்கமாகவே இது மாறி வருகிறது.

இதை குடிக்காதவர்கள், வாழ்க்கையை அனுபவிக்க தெரியாதவர்களாகவும், கஞ்சர்களாகவும், உலகத்தின் நவீன மாற்றத்திற்கு ஈடு கொடுக்க தெரியாதவர்களாகவும் விமர்சிக்க படுகிறார்கள்.

ஒரு நாள் முழுவதும் வேலை செய்து சுமார் 100 முதல் 150 வரை பெறும் ஒருவர், அதில் 70% வரை மது குடிக்க செலவழிக்கும் நிலையில்,

அவரின் குடும்பம் =>

உணவிற்காக:, ஒரு ரூபாய் அரிசியையும்

உடைக்காக: பழைய துணிகளையும், இலவச வேட்டி/சேலை களையும்

உறைவிடத்திற்காக: குடிசைகளையும்

மருத்துவத்திற்காக: அரசு மருத்துவமனைகளையும்

கல்வி: அவரின் பிள்ளைகள், தங்களின் கல்வி/மேற்படிப்பு பற்றிய கனவுகளை விட்டு விட்டு, வேலைக்ககும் செல்வதை தவிர,

வேறு என்ன மாற்று இருக்க முடியும் ?

அந்த நபரின் ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும், அவர்களின் அனைத்து தேவைகளுக்கும் அடுத்தவரின் உதவியையோ, அரசாங்கத்தின் இலவச திட்டங்களையோ முழுவதும் நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தபடுகிறார்கள்.

மேலும் அவர்கள் தங்களின் எதிர்கால கனவை துறந்து இன்ன பிற கூலி வேலைகளுக்கோ, சட்டத்திற்கு புறம்பான செயல்களிலோ ஈடுபட இதுவும் ஒரு காரணம் ஆகின்றது.

மேலே குறிப்பிட்ட எல்லாமுமே அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஒரு தனி மனிதனின் தவறான பழக்கம், ஒரு குடும்பத்தையே நடு வீதிக்கு வரவழைக்கிறது. ஆனால், இதில் கிடைக்கும் வருமானம் மட்டுமே அரசாங்கத்திற்கு முக்கியமாக தெரிகிறது.

ஒட்டுமொத்த கீழ்த்தட்டு மக்களும் அவர்களின் வாரிசுகளும் உணவு, உடை, உறைவிடம், கல்வி, மருத்துவம் போன்ற அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் அரசாங்கத்திடம் கையேந்தும் நிலைக்கு மறைமுகமாக உட்படுத்தபடுகிறார்கள்.

தங்கள் கட்சியை கீழ்த்தட்டு மக்களின் காவலர்களாக காட்டுவதற்கு இவர்கள் கையில் எடுக்கும் இலவச திட்டங்களும், இந்த மக்களின் பரிதாப நிலைக்கு பின்னால், இவர்களின் சுய நல அரசியல் இருப்பதை மறைத்து இவர்கள் நடந்து கொள்ளும் முறையை பார்க்கும பொழுது, "பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும்" செயல்தான் என் நினைவுக்கு வருகிறது.

இதன்மூலம், அரசியல்வாதிகள் பெறும் ஆதாயம் ஒட்டு எனும் மந்திரச்சாவி.



என்று தணியும் இந்த குடியின் மோகம்.

ஆண்டவா வழி காட்டு.

மீண்டும் சந்திப்போம்

இப்படிக்கு
JP

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம் எனக்கு மேலும் எழுத உற்சாக மூட்டும்...